மூன்று பேரும் ஒத்த கருத்துடன் இருக்க வேண்டிய அவசியமில்லை: சுனில் அரோரா விளக்கம்

  முத்துமாரி   | Last Modified : 18 May, 2019 03:09 pm
ec-members-not-clones-cec-sunil-arora-denies-rift-says-never-shied-away-from-debates

தேர்தல் ஆணையத்தில் இருக்கும் ஆணையர்கள் மூன்று பேரும் ஒத்த கருத்துடன் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கம் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிரான தேர்தல் விதிமுறை மீறல் புகாரின் விசாரணையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தனது கருத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்றும் இதனால் இனிவரும் ஆலோசனை கூட்டங்களில் தான் பங்கேற்கப்போவதில்லை எனவும் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக அவர், சுனில் அரோராவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் இது தொடர்பாக  இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, "தேர்தல் ஆணையத்தில் இருக்கும் ஆணையர்கள் மூன்று பேரும் ஒத்த கருத்துடன் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மூன்று பேரின் நிலைப்பாடும் ஒன்றாக இருக்கவேண்டியதில்லை. அப்படி எதிர்பார்ப்பதும் தவறு. இதற்கு முன்னதாக இருந்த தேர்தல் ஆணையர்களும் மாறுபட்ட கருத்துடன் இருந்துள்ளனர். எனவே தேர்தல் ஆணையத்தில் என்ற சர்ச்சை தேவையற்றது" என அவர் விளக்கம் அளித்துள்ளார். 

newstm.in

மரபை மீறிய தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா!

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close