டெல்லியில் இளைஞரை துப்பாக்கியால் சுட்ட மர்ம கும்பல்!

  ஸ்ரீதர்   | Last Modified : 18 May, 2019 03:10 pm
man-shot-at-in-rohini-by-unidentified-assailants-in-critical-condition

டெல்லியில் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத கும்பலால் சுடப்பட்டார்.

டெல்லியில் உள்ள ரோகினி நகரில் மனிஷ் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் காரில் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது காரை வழிமறித்த மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டனர்.

இதனால் மனிஷ் மற்றும் அவரது நண்பர்கள் காரிலிருந்து இறங்கி ஓடியுள்ளனர். ஆனால் மனிஷை மட்டும் துரத்திய மர்ம கும்பல் அவரை சுட்டு விட்டு தப்பி ஓடியது. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மனிஷ் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மனிஷை சுட்டுக்கொன்றது யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close