தேர்வில் வெற்றி பெற்றும் போஸ்டிங் போடலை: இளைஞர்கள் போராட்டம்

  Newstm Desk   | Last Modified : 18 May, 2019 05:06 pm
candidates-who-had-cleared-up-police-recruitment-exam-in-2013-staged-protest-outside-dm-office-y-day

உத்தர பிரதேசத்தில் போலீஸ் தேர்வில் வெற்றி பெற்று, 6 ஆண்டுகள் ஆகியும், இன்னும் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாததால், 100க்கு கணக்கான இளைஞர்கள் லக்னோவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

உத்தர பிரதேச மாநில காவல்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப, 2013ம் ஆண்டு போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பலரில், ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெற்றனர். எழுத்துத் தேர்வு,  உடல் கூறு தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டு, விரைவில் அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், தேர்வில் வெற்றி பெற்ற ஒருவருக்கு கூட, இன்று வரை பணி நியமன ஆணை வரவில்லை என, இளைஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அரசாங்க வேலைக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற்று 6 ஆண்டுகளாக காத்திருக்கும் தங்களை, மாநில அரசு தொடர்ந்து ஏமாற்றி வருவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

அவர்களில் சிலர், இன்று, லக்னோவில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close