விறுவிறுப்பாக நடைபெறும் இறுதிக்கட்ட தேர்தல்! ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..

  Newstm Desk   | Last Modified : 19 May, 2019 08:50 am
parliament-election-7th-phase

59 தொகுதிகளுக்கான 7ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் நிலையில் இறுதிக்கட்டமான 7ம் கட்ட தேர்தல் இன்று விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. அதிகாலை முதலே மக்கள் வாக்குச்சாவடிக்கு படை எடுத்துள்ளனர். 

இறுதிக்கட்ட தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு அதிகமாக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில், தேர்தல் ஆணையமும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் மக்களை கவரும் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி தொகுதியிலும் இன்று தான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

பீகார், ஹிமாச்சல் பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம்,  பஞ்சாப், உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்களில் இன்று மக்களவைத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close