கேதர்நாத்தை அடுத்து, பத்ரிநாத் கோவிலில் வழிபாடு செய்தார் மோடி!

  Newstm Desk   | Last Modified : 19 May, 2019 11:20 am
after-kedarnath-pm-modi-reaches-badrinath

பிரதமர் மோடி கேதர்நாத்தை தொடர்ந்து இன்று பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.

தொடர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பின்னர், பிரதமர் மோடி நேற்று உத்தரகாண்டில் உள்ள புகழ்பெற்ற கேதர்நாத் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். பின்னர் அங்குள்ள புனித குகையில் தியானம் மேற்கொண்டார். 

தொடர்ந்து இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனக்கும், கேதார்நாத்துக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது; கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக உணர்கிறேன் என்று கூறினார். 

தொடர்ந்து தற்போது, இன்று காலை 10.30 மணியளவில் அவர் பத்ரிநாத்தை சென்றடைந்தார். பத்ரிநாத் கோவிலில் அவர் வழிபாடு செய்து வருகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close