வடக்கு கொல்கத்தாவில் ரவீந்திரநாத் இல்லம் அருகே இன்று நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது. இதனால் அப்பகுதி பரபரப்பான நிலையில் உள்ளது. மேலும், வடக்கு கொல்கத்தாவில் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிக்கு வெளியே ஒரு வெடிகுண்டு வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிக்கு வெளியே பாஜக வேட்பாளர்களின் கார் ஒன்றை வெடிகுண்டு வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர்.
newstm.in