பெங்களுரூ: எம்.எல்.ஏ வீட்டின் முன்பு குண்டுவெடிப்பு! ஒருவர் பலி

  Newstm Desk   | Last Modified : 19 May, 2019 01:57 pm
karnataka-one-person-killed-in-blast-near-the-residence-of-rajarajeshwari-nagar-mla-munirathna-in-bengaluru

பெங்களுரூவில் எம்.எல்.ஏ ஒருவரது வீட்டின் முன்பாக, இன்று திடீரென வெடிகுண்டு வெடித்ததில், வெளியில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் பலியானார். 

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், மீதமுள்ள 59 தொகுதிகளுக்கான 7ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மேற்குவங்கத்தில் ஒரு பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து பெங்களுருவிலும் எம்.எல்.ஏ ஒருவரது வீட்டின் முன்பு இன்று வெடிகுண்டு வெடித்துள்ளது. 

கர்நாடகாவில் ராஜேஸ்வரி நகர் எம்.எல்.ஏ முனிரத்னா என்பவரது வீட்டின் முன்பாக இன்று திடீரென வெடிகுண்டு வெடித்ததில், வெங்கடேஷ் என்பவர் பலியாகினார். இதையடுத்து போலீஸ் கமிஷனர் சுனில்குமார் அப்பகுதிக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகிறார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close