நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், மீதமுள்ள 59 தொகுதிகளுக்கான 7ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, பிற்பகல் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு விபரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி,
பீகார் - 36.20 %
ஹிமாச்சல் பிரதேசம் - 34.47 %
ஜார்கண்ட் - 52.89 %
மத்திய பிரதேசம் - 43.89 %
பஞ்சாப்- 36.66 %
உத்திர பிரதேசம் - 36.37 %
மேற்கு வங்காளம் -47.55 %
சண்டிகர் - 35.60 %
அதேபோன்று, தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று(மே 19) இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு:
அரவக்குறிச்சி - 52.68 %
ஒட்டப்பிடாரம் - 45.06 %
சூலூர் - 48.04 %
திருப்பரங்குன்றம் - 47.09%
newstm.in