ம.பி: பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்கள் வாக்களித்தனர்!

  முத்துமாரி   | Last Modified : 19 May, 2019 02:58 pm
thirty-seven-visually-impaired-women-cast-their-votes-in-indore-madhya-pradesh

மத்தியப் பிரதேசம் இந்தூரில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்கள் 37 பேர் ஒரே சமயத்தில் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். 

மக்களவைத் தேர்தலில் இறுதிக் கட்டமாக, மீதமுள்ள 8 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை முதலே பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர். 

மூத்த வாக்காளர்களும், தள்ளாத வயதிலும் வந்து வாக்களித்து சென்றது ஊடகங்களில் வெளியானது. இந்த நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்தூரில் உள்ள வாக்குச்சாவடியில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்கள் 37 பேர் ஒரே சமயத்தில் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர். 

வாக்களித்த பின்னர் உற்சாகத்துடன் அவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்த காட்சி தான் இது.. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close