இரு வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலி.. 44 பேர் படுகாயம் !

  ஸ்ரீதர்   | Last Modified : 20 May, 2019 10:31 am
3-dead-in-road-accidents-in-uttar-pradesh-and-maharashtra

இருவேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 44 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ- ஆக்ரா விரைவு நெடுஞ்சாலையில் இன்று காலை நின்று கொண்டிருந்த லாரி மீது அந்த வழியாக வந்த பேருந்து மோதியது.

இதில் பேருந்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணம் செய்த 24 பயணிகள் காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பை- புனே தேசிய நெடுஞ்சாலையில் காலாபூர் என்ற இடத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரு விபத்துகள் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close