ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மரியாதை

  அனிதா   | Last Modified : 21 May, 2019 08:48 am
rajiv-gandhi-memorial-day-sonia-and-rahul-are-courtesy

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் பயங்கரவாத ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இன்று ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close