மண்ணுளி பாம்புகளை விற்க முயன்ற இருவர் கைது!

  ஸ்ரீதர்   | Last Modified : 21 May, 2019 11:45 am
sand-boa-snakes-worth-rs-1-2-crore-seized-2-held

மஹாராஷ்டிர மாநிலத்தில் மண்ணுளி பாம்புகளை விற்க முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மஹாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில் சிலர் மண்ணுளி பாம்புகளை விற்க முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நலசோப்ரா ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நடமாடுவதை பார்த்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் தடை செய்யப்பட்ட உயிரினமான மண்ணுளி பாம்புகள் இரண்டினை விற்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1 கோடியே இருபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு மணணுளி பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close