காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்ச்சித்துள்ள ரோஷன் பெய்க்!

  ஸ்ரீதர்   | Last Modified : 21 May, 2019 02:41 pm
if-we-lose-blame-siddaramaiah-dinesh-gundu-rao-congress-mla-roshan-baig

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தால் சித்தராமையாவின் அடாவடியும், தினேஷ் குண்டுரவின் இயலாததன்மையும் தான் காரணம் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ரோஷன் பெய்க் தெரிவித்துள்ளார்.

பெங்களுரில் செய்தியாளர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ரோஷன் பெய்க் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கர்நாடகாவில் அமைச்சர் பதவிகள் விற்கப்பட்டுள்ளன.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தால் அதற்கு சித்தராமையாவின் அடாவடித்தனமும், தினேஷ் குண்டு ராவ் போன்றவர்களின் இயலாமையும் தான் காரணம் என்றார்.

மேலும் கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.சி.வேணுகோபால் ஒரு கோமாளி என்று குறிப்பிட்ட அவர், மக்களவை தேர்தலில் போட்டியிட இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அதனால் இஸ்லாமிய சமூகத்தினர் தேவைப்பட்டால் பாஜகவுடன் கைகோர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close