விண்ணில் சீறியது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் !

  டேவிட்   | Last Modified : 22 May, 2019 07:00 am
pslv-c46-risat-2b-mission-a-success

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 5.27 மணிக்கு பூமி கண்காணிப்புக்கான செயற்கைகோளை ஏந்தியபடி பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

இன்று (புதன்கிழமை) காலை 5.27 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ரீசாட்-2பிஆர்1 என்ற பூமியை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட செயற்கைகோளை சுமந்து சென்ற இந்த ராக்கெட், பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படும்.  615 கிலோ எடை கொண்ட ரீசாட்-2பி ரேடார் செயற்கைக்கோளின ஆயுட்காலம் 5 வருடங்களாகும்.   

விண்வெளி தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறிந்துகொள்ள ராக்கெட் ஏவுவதை இங்கு பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 5 ஆயிரம் பேர் உட்கார்ந்து பார்வையிடும் அளவில் படிஇருக்கைகள் அமைக்கப்பட்டன.  10 வயதுக்கு மேற்பட்டவர்கள் இஸ்ரோ இணையதளத்தில் பெயர் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டதையடுத்து, பலரும் பதிவு செய்து உள்ளனர்.  பார்வையாளர்களின் இடத்திற்கும் , ஏவுதளத்திற்கு சுமார் 3 கிமீ தூரம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close