பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.600 கோடி மதிப்புடைய ஹெராயின் பறிமுதல்!

  அனிதா   | Last Modified : 22 May, 2019 09:06 am
200-kg-of-heroin-abducted-from-pakistan

பாகிஸ்தானிலிருந்து குஜராத் கடல் மார்க்கம் வழியாக கடத்திவரப்பட்ட 200 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது

பாகிஸ்தானிலிருந்து குஜராத் கடல் மார்க்கம் வழியாக பாகிஸ்தான் மீனவர் படகுகளில் ஹெராயின் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கடந்த 19ஆம் தேதி வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் உளவுத்துறையின் மூலம் குஜராத் கடலோர காவல் படைக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் முதல் குஜராத் ஜாகுவ் அரபி கடல்   பகுதியில்  குஜராத் கடலோர காவல் படையினர்  தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று ரோந்து பணியின்போது இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் மீனவ படகை மடக்கி சோதனை செய்தனர். அதில் 195 பண்டல்களில்  200 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் சுமார் ரூ.600 கோடி ஆகும்.

இந்த போதைப் பொருளை குஜராத் கடலோர காவல்படை கூடுதல் இயக்குனர் நடராஜன் தலைமையில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இதே பகுதியில் கடந்த ஆண்டு போதைப்பொருள் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் மட்டும் மிகப்பெரிய அளவில்  போதைப்பொருள் பிடித்திருப்பது இது இரண்டாவது முறையாகும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close