கர்நாடகா எல்லையை அடைந்தது கோதண்டராமர் சிலை!

  அனிதா   | Last Modified : 22 May, 2019 09:45 am
the-statue-of-the-kothandarama-went-to-karnataka

பல்வேறு இடையூறுக்கு பின் கோதண்டராமர் சிலை ஒரு வழியாக கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளியை சென்றடைந்தது.  

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள தெற்கு ஈ.ஜிபுரா பகுதியில் கோதண்டராமர்  கோவில் உள்ளது. இக்கோவிலில் பீடத்துடன் 108 அடி உயரத்தில் கோதண்டராமர் சிலை அமைக்க அனுமதி பெற்று, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு மலையில் வெட்டப்பட்டது. 

சுமார் 350 டன் எடை கொண்ட இந்த சிலையை கர்நாடகா மாநிலத்திற்கு எடுத்து செல்ல பிரத்யேக வாகனம் தயார் செய்யப்பட்டு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது. ஆனால் பல்வேறு போராட்டங்களை கடந்து ஓசூர் அருகே வந்த போது தென்பெண்ணை ஆற்றை கடக்க முடியாமல் கடந்த 13 நாட்களாக சிக்கி தவித்தது. 

இதையடுத்து, இதையடுத்த தென்பெண்ணை ஆற்றில் மண் பாலம் அமைக்கப்பட்டு பாலத்தை கடந்தது. இந்நிலையில் இன்று தமிழக எல்லையான ஜஜுவாடியை கடந்து  கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளிக்கு சென்றது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close