தலைமை தேர்தல் ஆணையரின் ஆலோசனைக்கூட்டம் 'திடீர்' ரத்து!

  முத்துமாரி   | Last Modified : 22 May, 2019 11:16 am
chief-election-commissioner-sunil-arora-s-meeting-cancelled

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளதையடுத்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மாநில தேர்தல் அதிகாரிகளோடு டெல்லியில் இன்று நடத்தவிருந்த ஆலோசனைக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டமாக நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே23) நடைபெறவுள்ளது. இதையொட்டி, அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் பணிக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை பணிகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, 10 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் டெல்லியில் இன்று ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. காணொலிக் காட்சி மூலமாக இன்று காலை 11.30 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது. 

இந்த சூழ்நிலையில் இந்த ஆலோசனை கூட்டமானது திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close