போலியான கருத்துக்கணிப்புகளால் ஏமாற வேண்டாம்: ராகுல் காந்தி அறிவுரை!

  Newstm Desk   | Last Modified : 22 May, 2019 04:57 pm
rahul-gandhi-tweet

போலியான கருத்துக்கணிப்புகளால் ஏமாற்றம் அடைய வேண்டாம் என்றும், கடின உழைப்பு ஒருபோதும் வீணாகாது என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டமாக நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே23) நடைபெறவுள்ளது. இதையொட்டி, அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் பணிக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், பாஜக 300க்கும் அதிகமான இடங்களை பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான ஊடகங்கள் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளன. இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் சற்று கலக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கீழ்குறிப்பிட்டவாறு பதிவிட்டுள்ளார்.

அதில், "அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியமானது. நீங்கள் விழிப்போடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். பயப்பட வேண்டாம். நீங்கள் உண்மையுடன் போராடுகிறீர்கள். போலியான கருத்துக்கணிப்புகளால் ஏமாற்றம் அடைய வேண்டாம். உங்களை நம்புங்கள்; காங்கிரஸ் கட்சியை நம்புங்கள். உங்களது கடின உழைப்பு ஒருபோதும் வீணாகாது. நம்பிக்கையுடன் இருக்கவும்" என்று பதிவிட்டுள்ளார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close