தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது

  ஸ்ரீதர்   | Last Modified : 22 May, 2019 04:58 pm
delhi-man-chops-father-s-body-into-25-pieces-caught-outside-home

 

டெல்லியில் சொத்து தகராறில் தந்தையை கொன்று அவரின் உடலை 25 துண்டுகளாக்கி சூட்கேசில் எடுத்து செல்ல முயன்ற மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் உள்ள சதாரா பகுதியில் வசித்து வந்தவர் சந்தேஷ் அகர்வால். இவர் பார்ஷ் பஜார் பகுதியில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். இவருக்கு மனைவியும், மகளும் இரு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் அவரது மூத்த மகன் அமன் குமார் சொத்து தொடர்பாக தனது தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை வழக்கம் போல் தந்தைக்கும் மகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அமன் குமார் தந்தை சந்தேஷை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவரின் உடலை 25 துண்டுகளாக வெட்டி 4 சூட்கேஸ்களில் வைத்து தனது நண்பர்கள் உதவியுடன் வெளியே கொண்டு போய் வீச முயன்றுள்ளார்.

ஆனால் அப்பகுதியில் இருந்த போலீசார் அமன் குமாரை நிறுத்தி விசாரணை செய்தனர். இதை பார்த்த அவரது நண்பர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து அமன் குமார் வைத்திருந்த சூட்கேஸ்களை போலீசார் சோதனை செய்தனர்.

சூட்கேசில் மனித உடல் உறுப்புகள் இருந்ததை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்து அமன் குமாரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது தனக்கும் தனது தந்தைக்கும் அடிக்கடி சொத்து தொடர்பான தகராறு ஏற்பட்டதாகவும், தன்னை அடிக்கடி தனது தந்தை திட்டி வந்ததால் கொலை செய்ததாகவும் அமன் குமார் தெரிவித்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close