யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி!

  முத்துமாரி   | Last Modified : 22 May, 2019 05:12 pm
prasar-bharati-ties-up-with-google-to-live-stream-23-may-counting-of-votes-on-youtube

2019 மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகளை பிரசார் பாரதி, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, யூட்யூப் மூலமாக நாடு முழுவதும் நேரலை செய்யவுள்ளது. 

நாடு முழுவதுமுள்ள 542 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், அரசு ஊடகமான பிரசார் பாரதி, முதல்முறையாக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மக்களவை தேர்தல் முடிவுகளை யூடியூபில் நேரலை செய்ய இருக்கிறது.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகும் வரை நேரலை நடைபெறும். இதற்காக இணையத்தில் யூடியுப் தளத்தில் தனியாக லிங்க் இருக்கும். அந்த லிங்கை கிளிக் செய்யும்பட்சத்தில் பிரசார் பாரதி குறியீட்டுடன் மக்களவைத் தேர்தல் முடிவுகளை நேரலையாக காணலாம். இதில் வெளியிடப்படும் தகவல்கள் மிகவும் துல்லியமாக இருக்கும் என்றும் பிரசார் பாரதி தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close