எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வீடு திரும்பினார்

  ஸ்ரீதர்   | Last Modified : 23 May, 2019 09:06 pm
jaitley-discharged-from-aiims

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின் இன்று வீடு திரும்பினார்.

மத்திய நிதி அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவினால் நேற்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

உடல் நலம் தேறிய நிலையில் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார். உடல் நலக்குறைவால் அருண் ஜெட்லி கடந்த 3 வாரங்களாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். மேலும் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close