மாேடி மகாநாயகன், அவரே கதாநாயகன்: அமித் ஷா புகழாரம்

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 08:17 pm
amit-shah-speech

மாேடி மகாநாயகன், அவரே கதாநாயகன் என பாஜக மாநில தலைவர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார். 

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "நாட்டின் பெரும்பாலான மக்கள் விரும்பும் ஒரே தலைவர் பிரதமர் நரேந்திர மாேடி என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல் வெற்றிக்கு, நாட்டின், 125 கோடி மக்களுக்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த வெற்றி, ஒட்டு மாெத்த நாட்டு மக்களின் வெற்றி. ஓடி ஓடி தேர்தல் பணியாற்றிய, கோடான கோடி பா.ஜ., தொண்டர்களின் வெற்றி. மேலும் இந்த வெற்றி, மக்கள் விரும்பும் மாேடியின் வெற்றி.

நாட்டு மக்கள் விரும்பும் தலைவர், பாரதிய ஜனதாவுக்கு கிடைத்துள்ளார். பா.ஜ.,வை எதிர்த்து பலர் கூட்டணி அமைத்தனர். ஆனால், 17க்கும் மேற்பட்ட மாநிலங்களில், மக்கள் 50 சதவீதத்திற்கு மேல், மக்கள் பா.ஜ.,வுக்கு வாக்களித்துள்ளனர்.  இந்த வெற்றி மக்களால் அளிக்கப்பட்ட வெற்றி.

இதன் மூலம், காங்கிரஸ் கட்சிக்கு தக்க பாடம் புகட்டி உள்ளனர். பல மாநிலங்களில், காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்ஜியம் தான் கிடைத்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ், மக்கள் நலனில் அக்கறை செலுத்தாததே, அந்த கட்சியின் தோல்விக்கு காரணம். அவர்கள் மக்களை ஜாதி வாரியாகவும், இன வாரியாகவும் பிரித்து வைத்திருந்தனர். ஆனால், அது தற்போது உடைக்கப்பட்டுள்ளது. 

உத்தர பிரதேசத்தில், மகா கூட்டணி அமைத்தனர். பா.ஜ., வீழ்த்துவதே தங்கள் குறிக்கோள் என்றனர். குடும்ப அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள், பா.ஜ.,வை வீழ்த்த திட்டமிட்டனர். ஆனால், உத்தர பிரதேசத்தில் பிரமாண்ட வெற்றி கிடைத்துள்ளது.

ஆந்திராவில் வெற்றி பெற்றுள்ள ஜெகன் மாேகன் ரெட்டிக்கு பா.ஜ., சார்பில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ஒடிசாவில் வென்ற நவீன் பட்நாயக்கிற்கு வாழ்த்துக்கள். சிக்கிம், அருணாச்சல பிரதேசம், கோவா மாநிலங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

மேற்கு வங்கத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளோம். இது, வரும் நாட்களில் மேற்கு வங்கம் முழுவதிலும் தன் ஆதிக்கம் செலுத்தும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.

இந்த வெற்றி, நாட்டை துண்டாக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிரான வெற்றி. எல்லாருடனும், எல்லாருக்குமான வளர்ச்சி என்ற மாேடியின் தாரக மந்திரத்திற்கு கிடைத்த வெற்றி. கடந்த, 70 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்திருந்த மக்களுக்காக, கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மாேடி பல நன்மைகளை செய்துள்ளார்.  அவர்களுக்காகவே உழைத்துள்ளார். 

ஏழைகளின் ஆசிர்வாதத்தால், இந்த வெற்றி சாத்தியம் ஆகியுள்ளது. கோடிக்கணக்கான ஏழைகளின் மனங்களில் இடம் பெற்ற மாேடி, தற்போது மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

நம் வெற்றிக்காக உழைத்த கோடிக்கணக்கான பாரதிய ஜனதா தொண்டர்களுக்கு என் இதயப்பூர்மான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று, காந்திநகர் தொகுதியில் இருந்து என்னை தேர்ந்தெடுத்து, மக்களவை உறுப்பினராக என்னை பார்லிமென்டிற்கு அனுப்பி வைத்துள்ள அனைவருக்கும் நன்றி. 

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், நாங்கள் மக்களுக்கு 75 வாக்குறுதிகளை அளிக்கிறோம். 2022ம் ஆண்டு, இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு, புதிய இந்தியாவை நீங்கள் பார்ப்பீர்கள். மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையை முடிக்கிறேன். பாரத் மாதா கீ ஜெய், இவ்வாறு அமித் ஷா பேசினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close