மக்களின் பாதத்தில் வெற்றியை சமர்ப்பிக்கிறேன்: பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 08:20 pm
p-m-modi-speech-in-delhi

மக்களவை தேர்தலில் பா.ஜ., வெற்றி குறித்து டெல்லியில், பிரதமர் நரேந்திர மாேடி பேசியதாவது:

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், உழைப்பின் சிகரமும் ஆன, மரியாதைக்குரிய சகோதரர் அமித் ஷா அவர்களுக்கும், அனைத்து தொண்டர்களுக்கும் வணக்கம். இன்று, நம் வெற்றிக் கொண்டாட்டத்துடன், மழையும் சேர்ந்துள்ளது. 

இந்தியாவின், 130 கோடி மக்களுக்கும் என் சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன். இப்போது நடந்து முடிந்திருக்க தேர்தல், உலக அளவில் மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. நாடு சுதந்திரம் அடைந்த பின் எத்தனையோ தேர்தல்கள் நடத்திருந்த போதும், எல்லா தேர்தல்களையும் விட, இந்த தேர்தலில் தான் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. 

அதுவும், 40 - 42 டிகிரி வெயிலுக்கு இடையே, மக்கள் ஓட்டளித்துள்ளனர். இதன் மூலம், வாக்களிப்பின் அவசியம் குறித்து, உலக மக்களுக்கு, இந்தியர்கள் உணர்த்தியுள்ளனர்.

இன்றைய தேர்தல் முடிவுகளின் மூலம் பகவான் கிருஷ்ணர் பதில் அளித்துள்ளார். அவர் எந்த பக்கமும் நிற்கவில்லை. ஹஸ்தினாபுரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அவர் பாடுபட்டார். அதே போலத்தால், இந்தியர்கள் ஒவ்வொருவரும், கிருஷ்ண பரமாத்மாவாக மாறி, இந்தியாவை காக்க ஒரு முடிவு எடுத்துள்ளனர். 

இந்த தேர்தலில் எந்த கட்சியும் போட்டியிடவில்லை, வேட்பாளர் போட்டியிடவில்லை, தனி மனிதன் போட்டியிடவில்லை. ஆனால், மக்கள் தங்களுக்காக தாங்களே போட்டியிட்டுள்ளனர். இதில் கிடைத்த வெற்றி, இந்தியாவிற்கான வெற்றி, இந்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றோர் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த பகுதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன். வெற்றி பெற்ற ஒவ்வொருவரும், தோளாேடு தோள் சேர்த்து பணியாற்ற வேண்டும். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து மாநில அரசுகளுக்கும் நான் இன்று ஓர் உறுதியளிக்கிறேன். அனைவருக்குமான முன்னேற்றத்திற்காக, மத்திய அரசு தோள் கொடுக்கும். இந்த வெற்றிக்காக பாடுபட்ட, கோடி கோடி கட்சித் தொண்டர்களுக்கு கோடி கோடி நன்றிகள். ஜனநாயகத்தை காப்பாற்ற தங்கள் கடமையாற்றிய ஜனநாயக பிரஜை அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வெற்றி மாேடியின் வெற்றி அல்ல. சாதாரண குடிமகனின் வெற்றி. வியர்வை சிந்தி உழைத்து, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, பங்களித்தவர்களின் வெற்றி. தங்கள் பசியையும் பொருட்படுத்தாமல், தேச முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்களின் வெற்றி. 

உழைப்பாளர்கள் நலன் குறித்து வாய் கிழிய பேசும் இடதுசாரிகள், இதுவரை அவர்களுக்காக எதையும் செய்ததில்லை. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்த பா.ஜ., அரசு, 40 கோடி தொழிலாளர்களுக்கு பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது, 

இது, மத்திய வர்க்க குடும்பத்தினரின் வெற்றி. அவர்களுக்கு தேவையானதைப் பற்றிய, யாரும் இதுவரை யாேசித்ததில்லை. ஆனால், பா.ஜ., தலைமையிலான அரசு அதை செய்தது. அவர்கள் அளித்த வெற்றி, அவர்களின் வெற்றி தான் இது. 

மதசார்பற்றவர்கள் ஒன்று சேருங்கள் என கூச்சலிட்டவர்கள், மக்களை முட்டாளாக்க நினைத்தனர். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. மக்கள் சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்துள்ளனர். 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close