Election Results 2019 LIVE Updates: மே 30ல் பதவியேற்கிறார் பிரதமர் மோடி?

  Newstm Desk   | Last Modified : 24 May, 2019 08:18 pm
narendra-modi-s-oath-taking-ceremony-likely-to-take-place-on-may-30

17வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 

20.17: டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த, பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அத்துடன் 16-ஆவது மக்களவையை கலைத்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்ற்பட்ட தீர்மானத்தையும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் வழங்கினார். 

20.15: நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. தனிபெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்று 2-ஆம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 23 இடங்களில் வெற்றி பெற்று தேசிய அளவில் திமுக 3-ஆம் இடத்தை பிடித்துள்ளது.

18.00: நாட்டின், 17வது மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, 16வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மான கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் அளிக்கும் பொருட்டு, பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். 

17.30: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் சற்றுமுன் தொடங்கியுள்ளது. 

17.00: பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்கின்றனர். 

16.10: மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக தலைமை அழைத்த நிலையில், அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்துத்துறை இணை அமைச்சராக இருக்கும் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என தகவல். 

16.00: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து, தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் வருகிற ஜூன் மூன்றாம் தேதி கருணாநிதி பிறந்த நாள் அன்று சென்னையில் நடைபெற இருக்கிறது. 

தமிழகத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பிக்கள் நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறுகின்றனர். 

 

15.30: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் பாஜக பெற்றதை அடுத்து,  பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அவர் சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

மேலும், அமைச்சரவை குறித்து விவாதிக்க நாளை பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

 

14.30: நாடு முழுவதும் பாஜக தனித்து 302 தொகுதிகளில் வெற்றி; ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி. 

14.00 : தமிழகத்தில் உள்ள குளம், குட்டைகளில் வேண்டுமானாலும் தாமரை மலரலாம்; தமிழக நிலத்தில் ஒரு போதும் தாமரை மலராது - சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திருமாவளவன் 

13.50: திமுக எம்.பிக்கள் கூட்டம் நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

13.30: உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவரைத் தொடர்ந்து, ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

13.00: பிரதமர் மோடிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்து. 

12.50: தமிழகத்தில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 9 தொகுதியில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட அதிமுகவுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். 

தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி வெற்றியால் தமிழகத்திற்கு எந்த லாபமும் இல்லை; கடந்த 6 மாதங்களாக பொய்யான பிரசாரத்தை மக்கள் மத்தியில் பரப்பி திமுக வெற்றி பெற்றுள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பாஜகவுடன் கூட்டணி தொடருமா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் ஜெயக்குமார் "கொள்கை முடிவு என்பதால் கூட்டணி குறித்து கட்சி முடிவு செய்யும்" என்று பதில் அளித்துள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி; தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலமாக  தமிழர்கள் தங்களை காத்துக்கொண்டனர் - வைரமுத்து 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், 23 இடங்களில் வெற்றி பெற்றுள்ள திமுக, எம்.பி.,க்கள் எண்ணிக்கையில், அகில இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. 

12.30: கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்வதற்கான தடையை உச்சநீதிமன்றம் நீட்டிக்க மறுத்துள்ளதையடுத்து அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் காங்கிரஸ் கட்சி

12.10: நாடு நலன் பெற பாஜக & பிரதமர் மோடி தவிர வேறு எதுவும் இருக்க முடியாது - முரளி மனோகர் ஜோஷி பெருமிதம்

தனக்கு வாழ்த்து தெரிவித்த உலக நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். 

12.00: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி அதிகாரப்பூர்வமாக 300 இடங்களை தாண்டியுள்ளது. 

மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் முதன்முறையாக பாரதிய ஜனதா 18 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இங்கு ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அமேதிக்கு இன்றைய தினம் புதுவிடியல்; எனக்கு வாக்களித்த அமேதி தொகுதி மக்களுக்கு நன்றி. தொகுதியின் வளர்ச்சியை எண்ணி என் மீது நம்பிக்கை வைத்து, மத்தியில் தாமரை மலர வாக்களித்த என் மக்களுக்கு நன்றி - அமேதி தொகுதி பாஜக வெற்றி வேட்பாளர் ஸ்ம்ரிதி இரானி. 

பீகார்  மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதாதள கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

ஒடிசா மாநில முதல்வராக பதவியேற்கவுள்ள நவீன் பட்நாயக்-கிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. 

11.40: மக்களவைத் தேர்தலில் தோல்வியையடுத்து, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் 62 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. இந்திய அளவிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியுள்ளதால், உத்திரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

11.20: மக்கள் நீதி மய்யம் என்ற குழந்தையை மக்கள் நடமாட, ஓட விட்டுள்ளனர்; தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் - கமல்ஹாசன் 

தமிழகத்தையும் இந்தியாவின் ஒரு மாநிலமாக பார்க்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு கமல் ஹாசன் கோரிக்கை

11.00: பிரதமர் மோடி வருகிற மே 30ம் தேதி இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கிறார். மேலும் அவர் மே 28ம் தேதி வாரணாசியும் மே 29ம் தேதியும் காந்தி நகருக்கும் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதன் மூலம் இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கும் காங்கிரஸ் அல்லாத தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். 

ஆந்திர முதல்வராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வருகிற மே 30ம் தேதி பதவியேற்கிறார். 

பிரதமர் மோடி பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி சந்தித்து வாழ்த்து பெற்றார். 

— Narendra Modi (@narendramodi) May 24, 2019

 

10.30: பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, அத்வானியின் வீட்டிற்கு வருகை.

இமாசலப் பிரதேச மாநிலத்தில் நோட்டாவுக்கு 33 ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவைத் தேர்தலில் தோல்வி: நாளை (மே 25ஆம் தேதி) காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. 

10.00: கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி எம்.பி மரியாதை செலுத்தினர். தனது வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவதாக அவர் கூறியுள்ளார்.  

350 இடங்களில் பா.ஜ., கூட்டணி வெற்றி; மீண்டும் பிரதமராகிறார் மாேடி

தமிழகத்தில் அபார வெற்றி பெற்ற திமுக கூட்டணி!

தமிழக சட்டசபை இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு நிலவரம்

May 23,2019 - Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close