பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்! ஜனாதிபதியை சந்திக்கிறார் மோடி

  Newstm Desk   | Last Modified : 24 May, 2019 04:06 pm
pm-modi-to-hold-cabinet-meeting-today

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் பாஜக பெற்றதை அடுத்து,  பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

17வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது நேற்று நடைபெற்ற நிலையில், பாரதிய ஜனதா கட்சி தனித்து 302 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது; ஒரு இடத்தில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கிறது. பிரதமர் பதவி ஏற்கும் காங்கிரஸ் அல்லாத தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். 

இதையடுத்து  பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை டெல்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து, மாலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அவர் சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதவிர, பிரதமர் மோடி வருகிற மே 30ம் தேதி பிரதமராக பதவியேற்க இருப்பதாகவும்,  அதற்கு முன்னதாக அவர்மே 28ம் தேதி வாரணாசியும் மே 29ம் தேதியும் காந்தி நகருக்கும் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close