17வது மக்களவையை அலங்கரிக்க உள்ள பெண் எம்.பிக்கள் இவர்கள் தான்!

  Newstm Desk   | Last Modified : 24 May, 2019 10:40 pm
17th-lok-sabha-will-see-76-women-mps-maximum-so-far

17வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மக்களவையில் மொத்தம் 76 பெண் எம்.பிக்கள் இடம்பெறுகின்றனர். 

17வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது நேற்று நடைபெற்ற நிலையில், பாரதிய ஜனதா கட்சி தனித்து 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கிறது. மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கவிருக்கிறார். 

இதையடுத்து, 17வது மக்களவைக்கு, நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 76 பெண் எம்.பிக்கள் அனுப்பப்படுகின்றனர். கடந்த முறை 66 பெண் எம்.பிக்கள் இருந்த நிலையில், இந்த முறை 10 பேர் கூடுதலாக இடம்பெற்றுள்ளனர். 

இதில், பாஜக சார்பில் களம் கண்ட 47 பெண் வேட்பாளர்களில் 34 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி, மேனகா காந்தி, ஹேமா மாலினி உள்ளிட்ட 9 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் தரப்பில் இருந்து 54 பெண் வேட்பாளர்கள் களம் இறங்கினர். அதில், ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சோனியா காந்தியும், தமிழகத்தில் திமுக கூட்டணியில் கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்றுள்ளார். 

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 24 பேர் களமிறங்கிய நிலையில், ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 17 பேர் போட்டியிட்ட நிலையில் 9 பேரும், ஒடிசாவில் 7 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் 5 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். 

சுயேட்சையாக பெண் வேட்பாளர்கள் 222 பேர் போட்டியிட்ட நிலையில், கர்நாடக மாநிலம், மாண்டியா தொகுதியில் சுமலதா வெற்றி பெற்றுள்ளார். 

திமுக சார்பில், தென்சென்னை தொகுதியில் இருந்து தமிழச்சி தங்கபாண்டியன், தூத்துக்குடி தொகுதியில் இருந்து கனிமொழி ஆகியோர் மக்களவைக்கு செல்கின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close