பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 12:43 pm
modi-thanks-to-pmo-employees

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, இன்று பிரதமர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை சந்தித்து வாழ்த்து பிரதமர் மோடி பெற்றார். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக தனித்து 303 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. 

இதையடுத்து இன்று பிரதமர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை சந்தித்து, வாழ்த்து பிரதமர் மோடி பெற்றார். மேலும், அவர்களது அர்பணிப்புக்காக நன்றி தெரிவித்துக் கொண்டார். 

பிரதமர் அலுவலக ஊழியர்கள் முன்பு பேசிய மோடி, "எங்களது வெற்றிக்காக உழைத்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. அரசின் பொறுப்புகளை உணர்ந்து நீங்கள் கடினமாக உழைத்துள்ளீர்கள். கண்டிப்பாக உங்களது குடும்பத்தினர் ஒத்துழைப்பு இன்றி நீங்கள் கடுமையாக உழைக்க முடியாது. எனவே ஒட்டு மொத்த வெற்றிக்காக உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் நன்றி" என்று பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close