மக்களவைத் தேர்தலில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் முன்னாள் முதல்வர்கள்!

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 01:19 pm
shrunk-to-52-seats-congress-loses-regional-hold-with-losses-for-9-ex-cms

நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாஜக 303 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்று மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முன்னாள் மாநில முதல்வர்கள் 9 பேர் இந்த மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளனர். இவர்கள் அனைவருமே அவர்களது மாநிலங்களில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்கள். இவர்களது தோல்வி காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. 

அவர்களின் விபரங்கள் பின்வருமாறு: -

1. ஷீலா தீக்ஷித் - டெல்லியில் மூன்று முறை முதல்வராக இருந்தவர். 

2. பூபிந்தர் சிங் ஹூடா- ஹரியானா முன்னாள் முதல்வர். 

3.  ஹரிஷ் ராவத் - உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர். 

4. திக்விஜய் சிங் - மத்தியபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர். 

5. வீரப்ப மொய்லி: கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் & முன்னாள் பெட்ரோலியத்துறை அமைச்சர்

6. சுஷில்குமார் ஷிண்டே - மத்திய பிரதேச மாநில  முன்னாள் முதல்வர் 

7. அசோக் சவான் - மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர். 

8.நபம் துகி - அருணாச்சல பிரதேசம் முன்னாள் முதல்வர். 

9. முகுல் சங்மா - மேகாலயா மாநில முன்னாள் முதல்வர் 

மேற்குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அவர்களது மாநில மக்களிடையே சிறப்பான செல்வாக்கு பெற்றவர்கள். இவர்கள் தோல்வி அடைந்தது அம்மாநில மக்களிடையே காங்கிரஸ் கட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவே கருதப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close