காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார்! - சுர்ஜிவாலா

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 04:55 pm
rahul-gandhi-is-continued-as-a-congress-chief

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, கட்சி உறுப்பினர்களுடன் டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக நேற்று தகவல் வெளியானது. இன்று நடந்த கூட்டத்திலும் அவர் ராஜினாமா செய்வதாக கூறியதாகவும், அதற்கு அங்கிருந்த காங்கிரஸ் தலைவர்கள் மறுத்ததாகவும் தகவல் வெளியானது. 

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரமும் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், "தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்ய வந்தது உண்மை தான். ஆனால், உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். எனவே ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக நீடிக்க வேண்டும் என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

கட்சியை மாற்றியமைப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். அதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். எங்களது தோல்வி குறித்து ஆராய்வோம்" என்று கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close