விவிபேட் - இவிஎம் வாக்குகள் முழுவதுமாக ஒத்துப்போனது: தேர்தல் ஆணையம்

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 04:56 pm
evms-pass-test-vvpat-matching-success

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள், விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளுடன் முழுவதுமாக ஒத்துப்போனதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

17 ஆவது நாடாளுமன்ற மக்களவை தேர்தல், ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகளும் கடந்த 23ம் தேதி அறிவிக்கப்பட்டன. அதன்படி பாரதிய ஜனதா கட்சியை 303 இடங்களில் தனித்து வெற்றி பெற்று, பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

இந்த தேர்தலுக்கு முன்னதாகவும், தேர்தல் சமயத்திலும் வாக்குபதிவு இயந்திரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதற்காக, 100% விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளுடன்,  வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தன. 

ஆனால், ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதியில் 5 விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை மட்டுமே எண்ண முடியும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. அதன்படியே வாக்கு எண்ணிக்கையும் நடந்து முடிந்துள்ளது. 

அதன்படி, தேர்தலில் உபயோகப்படுத்தப்பட்ட 17.3 லட்சம் விவிபேட் இயந்திரங்களில் 20,625 இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளுடன்,  வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் ஒப்பிடப்பட்டது. இதில் இரு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் முழுவதுமாக ஒத்துப்போனதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close