காங்கிரஸ் மூத்த தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்ற பாஜக வெற்றி வேட்பாளர்!

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 05:40 pm
delhi-bjp-chief-manoj-tiwari-met-delhi-congress-chief-sheila-dikshit-today-and-sought-her-blessings

டெல்லி வடகிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி, டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித்தை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் டெல்லி வடகிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் மனோஜ் திவாரி போட்டியிட்டார். அவருக்கு எதிராக டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்ஷித் களமிறங்கினார். 

தேர்தல் முடிவில், மனோஜ் திவாரி ஷீலா தீக்ஷித்தை விட 3,66,102 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, இன்று மனோஜ் திவாரி டெல்லியில் உள்ள ஷீலா தீட்சித்தின் வீட்டிற்கு சென்று, அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஷீலா தீட்சித் டெல்லியில் மூன்று முறை முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close