மாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 08:09 pm
anand-mahindra-wants-to-dance-gharba-tweet-about-modi-s-win

மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மாேடி தலைமையிலான பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதை, பாஜவினர் மற்றும் மாேடி ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வரும் நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியர்களும் இந்த வெற்றியை ஆட்டம் போட்டு கொண்டாடினர். 

இது குறித்த வீடியோ பதிவை வாட்ஸ் ஆப் ஒன்டரில் பார்த்த, மகேந்திரா அண்டு மகேந்திர குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா, அதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன், ‛‛இவர்கள் ஆடுவதை பார்த்தால், எனக்கும் கர்பா நடனம் ஆட தோன்றுகிறது. அதற்கான குச்சிகளை நான் துாசி தட்ட வேண்டியிருக்கும் போலிருக்கிறதே’’ என, மகிழ்ச்சியாகவும், குறும்புத் தனமாகவும் பதிவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close