காஷ்மீரில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

  Newstm Desk   | Last Modified : 26 May, 2019 09:18 am
soldier-commits-suicide-in-baramulla

காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

வடக்கு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் 'ஹெமரே பட்டான்' என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றுபவர் பாட்டினி திரிபாதி ராவ் (Sepoy Battini Tirupati Rao). இவர் நேற்று காலை திடீரென, தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் இதனை அறிந்த சக வீரர்கள், அவரை சென்று பார்த்தபோது, அவர் தலையில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் கிடந்தார். தொடர்ந்து மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று விபரம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close