நிதின் கட்கரிக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர்!

  Newstm Desk   | Last Modified : 26 May, 2019 02:16 pm
cm-edappadi-palanisamy-wishes-to-nitin-gadkari

கோதாவரி - கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் தமிழகத்திற்காக நாங்கள் செய்யும் முதல் வேலை என்று நிதின் கட்கரி கூறியதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தற்போது மீண்டும் பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற பிறகு, கோதாவரி - கிருஷ்ணா நதிகளை இணைத்து தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை சரிசெய்வதே எங்களது முதல் பணி என்று பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

நிதின் கட்கரி கூறியதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நிதின் கட்கரிக்கு மனமார்ந்த நன்றிகள். தற்போதைய சூழ்நிலையில், கோதாவரி - கிருஷ்ணா இணைப்பு என்பது மிகவும் முக்கியமானது. இந்த நதிகள் இணைப்பு தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை போக்கும்" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close