மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் எங்கு, எப்போது தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 26 May, 2019 03:11 pm
pm-modi-s-first-foreign-trip

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக,  வரும் ஜூன் 13 -ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி கிர்கிஸ்தானுக்கு  பயணம் மேற்கொள்கிறார். 

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக இமாலய வெற்றியை பெற்றதையடுத்து வரும் 30- ஆம் தேதி, இரண்டாவது முறை, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். பிரதமராக பொறுப்பேற்றதும் முதல் அரசுமுறை பயணமாக அவர், ஜூன் 13 -ஆம் தேதி, கிர்கிஸ்தான் செல்ல உள்ளார். அந்நாட்டின் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இரண்டு நாள் மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார்.

மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும், பிரதமர் மோடி அங்கு சந்தித்து பேசுவார் எனத் தெரிகிறது. அத்துடன், இம்மாநாட்டில் பங்கேற்க வரும் சீன அதிபர் ஜி ஜிம்பிங்கையும் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, ஜப்பானின் ஒசாகா நகரில் ஜூன் 28 -இல் நடைபெறும் ஜி -20 நாடுகளின் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
கடந்த 2014 -ஆம் ஆண்டுஸ பிரதமராக மோடி பதவியேற்றதும் முதல் அரசுமுறை பயணமாக பூடானுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close