ஒடிசாவில் இருந்து மக்களவைக்கு செல்லும் இளம் வயது பழங்குடியின பெண் எம்.பி!

  Newstm Desk   | Last Modified : 26 May, 2019 02:24 pm
bjd-s-chandrani-murmu-to-be-youngest-ever-lok-sabha-mp

ஒடிசா மாநிலத்தில் இருந்து பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் மக்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், 17வது மக்களவையில் இடம்பெறும் மிக இளம் வயது எம்.பி என்ற பெருமையை பெறுகிறார். 

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்திராணி முர்மு(25) என்ற பெண், புவனேஸ்வரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.டெக் முடித்துள்ளார். இவரது தந்தை சஞ்சீவ், அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது சமூக சேவை செய்து வருகிறார். சந்திராணியும் அப்பகுதி மக்களுக்கு சேவை செய்து வருகிறார். இதனால் அப்பகுதியில் சந்திராணி மிகப் பிரபலமானவர் என்று கூறலாம்.

இதைத் தொடர்ந்து அவர் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், அவரது உறவினர் ஒருவர் ஊக்கம் கொடுக்கவே, சந்திராணி தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளார்.

தொடர்ந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசியுள்ளார். அவரும் இதற்கு சம்மதிக்கவே, பிஜு ஜனதா தளம் கட்சியின் சார்பில் கியான்ஜ்கர்( Keonjhar) தொகுதியில் போட்டியிட்டார். எதிர்பார்த்தபடியே, அவர் பாஜக வேட்பாளரை 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து ஒடிசா மாநிலத்தில் இருந்து மிக இளம் வயது எம்.பி ஒருவர் மக்களவையில் இடம்பெறுகிறார். சந்திராணிக்கு வயது 25 என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, சந்திராணிக்கு அம்மாநில தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close