ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் மே 29ல் பதவியேற்கிறார்!

  Newstm Desk   | Last Modified : 26 May, 2019 07:15 pm
naveen-patnaik-take-oath-on-may-29

ஒடிசா முதல்வராக 5 வது முறையாக நவீன் பட்நாயக் வருகிற 29ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலுடன் ஒரிசா மாநிலத்திற்கு சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் பிஜூ ஜனதா தளம் வெற்றி பெற்று, மீண்டும் நவீன் பட்நாயக் தலைமையில் ஆட்சி அமைகிறது.

இங்கு, பாஜக 23 தொகுதிகளை பெற்று முதல்முறையாக ஒடிசாவில் பிரதான எதிர்க்கட்சியாக தகுதி பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 9 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. இதையடுத்து ஒடிசாவின் முதல்வராக 5 வது முறையாக நவீன் பட்நாயக் வருகிற 29ம் தேதி பதவியேற்கிறார். இன்று ஒடிசாவில் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுகிறது. அதில் சட்டமன்ற தலைவராக நவீன் பட்நாயக் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தொடர்ந்து 29ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார். 

இந்த 5 வருடங்கள் நவீன் பட்நாயக் ஆட்சி செய்வதன் மூலம், நாட்டிலேயே அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். முன்னதாக இருந்த மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு, சிக்கிம் முதல்வர் பவன்குமார் சாம்லிங்க் ஆகியோரது சாதனைகளை நவீன் பட்நாயக் முறியடிக்கிறார். நவீன் பட்நாயக் கடந்த 2000ம் ஆண்டு முதல் ஒடிசாவில் முதல்வராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close