நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் நடந்து முடிந்ததையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
17வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்.11ஆம் தேதி முதல் மே.19 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனை முன்னிட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 10ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தற்போது, வேலூரை தவிர்த்து 542 தொகுதிகளுக்கான தேர்தல்கள் நிறைவடைந்ததையடுத்து நாடுமுழுவதும் இன்று தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் 4 மாநில பேரவைத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள் நடைபெற்ற மாநிலங்களிலும் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
newstm.in