வாரணாசி வந்தடைந்தார் நரேந்திர மோடி!

  Newstm Desk   | Last Modified : 27 May, 2019 12:51 pm
pm-modi-in-varanasi

தமது சொந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தார்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் மீண்டும் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்கு 5,22,116 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். 

தம்மை இவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்த சொந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணியளவில்  வாரணாசி வந்தடைந்தார். உத்தரப் பிரதேச மாநில ஆளுநர் ராம்நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் அவரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று பிரதமர்,  அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close