மேற்கு வங்கம் : பாஜக தொண்டர் சுட்டுக்கொலை

  Newstm Desk   | Last Modified : 27 May, 2019 12:08 pm
west-bengal-a-bjp-worker-shot-dead

மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் வடக்கு மாவட்டத்துக்குட்பட்ட பாத்தபாரா பகுதியில், பாஜக தொண்டரான சந்தன் ஷா என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்றிரவு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இதனால் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருவதையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இக்கொலை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலின்போது, ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்களுக்கு இடை யே நீடித்து வந்த மோதல் போக்கு காரணமாக, கலவர பூமியாக இருந்த மேற்கு வங்க மாநிலத்தில், தேர்தல் முடிந்த சில நாள்களில் மற்றொரு கொலை நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close