பெங்களூரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை: அமைச்சர் ஆய்வு

  Newstm Desk   | Last Modified : 27 May, 2019 02:08 pm
heavy-rainfall-in-bengaluru

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்றிரவு துவங்கிய கனமழை, இன்று அதிகாலை வரை கொட்டித் தீர்த்தது. இதனால், பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக தலைநகர் பெங்களூரில், நேற்றிரவு லேசான சாரல் மழை துவங்கியது. கடும் கோடையால் தவித்த பெங்களூரு வாசிகள் இதனால் சற்று ஆறுதல் அடைந்தனர். நேரம் செல்லச் செல்ல கனமழையாக மாறியது. ஆங்காங்கே பலத்த காற்றுடன் பெய்த கனமழை, இன்று அதிகாலை வரை நீடித்தது. 

நகரின் முக்கிய பகுதிகளில், சாலையோரங்களில் இருந்த மரங்கள் சாய்ந்தன. இதனால், சில இடங்களில் மின்சப்ளை பாதிக்கப்பட்டது, சாலைகளில் மழை நீர் தேங்கியதால் சாலை போக்குவரத்து கடுமயாக பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, காங்., மூத்த தலைவரும், துணை முதல்வருமான பரமேஸ்வர் நேரில் பார்வையிட்டார். உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close