3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது: பாபா ராம்தேவ்

  முத்து   | Last Modified : 27 May, 2019 04:57 pm
baba-ramdev-should-not-vote-for-the-3rd-child

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த 3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்று யோகா குரு பாபா ராம்தேவ் யோசனை தெரிவித்துள்ளார்.

ஹரித்துவாரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த என்று யோகா குரு பாபா ராம்தேவ், ’வரும் 50 ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியை கடந்துவிடும். எனவே மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த 3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை தரக்கூடாது. வாக்குரிமை கிடையாது என சட்டம் இயற்றினால் தான் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும்’ என்றார்.

மேலும், தேர்தலில் போட்டியிடவோ, அரசின் சலுகைகளை அனுபவிக்கவோ 3-ஆவது குழந்தைக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்றும் பாபா ராம்தேவ் கூறியுள்ளார். இவரின் இந்த யோசனை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close