போதைப் பொருளுடன் சுற்றித் திரிந்த போலந்து ஆசாமி கைது

  Newstm Desk   | Last Modified : 27 May, 2019 08:09 pm
polland-man-arrested-for-carrying-drugs-in-haryana

ஹரியானாவில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் சுற்றித் திரிந்த, போலந்து நாட்டை சேர்ந்த நபரை, போலீசார் கைது செய்தனர். 

ஹரியானா மாநிலம், குருகிராமில், வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர், சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்தார். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரின் கைப் பையை  சாேதித்தனர். அதில், 4 கிலோ எடையுடைய, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருந்தன. 

இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார், அவர் யார் என விசாரித்தனர். அப்போது, அந்த நபர், போலந்து நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணி என்பது தெரிய வந்தது. அவரிடம் இவ்வளவு போதைப் பொருள் எப்படி கிடைத்தது? யார் கொடுத்து அனுப்பினர் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close