டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 28 May, 2019 11:01 am
cauvery-management-authority-to-meet-today

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பான காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டது. காவிரி நதி நீரை குறிப்பிட்ட மாநிலங்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் பகிர்ந்துகொள்வதற்காக இந்த அமைப்புகள் நியமிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதியும், காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதியும் நடந்தது. தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான காவிரி ஒழுங்காற்று கூட்டம் கடந்த மே 23ம் தேதி நடைபெற்றது. 

அதன் தொடர்ச்சியாக, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று டெல்லியில் ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர். 

ஜூன் மாதம் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய காவிரி நீரை திறந்துவிட இந்த கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close