மே மாதம் இறுதிக்குள் தண்ணீர் திறந்துவிட தமிழக பிரதிநிதிகள் கோரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 28 May, 2019 11:40 am
cauvery-management-authority-to-meet-today

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பான காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று டெல்லியில் ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர். 

அதன்படி, வருகிற மே மாதம் இறுதிக்குள் தமிழகத்திற்கு தர வேண்டிய 2 டி.எம்.சி நீரை தரவேண்டும் என்றும் மேலும், ஜூன் மாதம் குறுவை சாகுபடிக்காக 9.2 டி.எம்.சி நீரை திறந்துவிட வேண்டும் என்றும் கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர, வழக்கு நிலுவையில் உள்ளதால் மேகதாது அணைத்திட்டம் குறித்து இனிமேல் கூட்டத்தில் விவாதிக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து தற்போது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close