திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார் ஜெகன்மோகன் ரெட்டி!

  Newstm Desk   | Last Modified : 29 May, 2019 11:00 am
jagan-off-to-tirumala-before-taking-oath-of-office

ஆந்திராவின் முதல்வராக பதவியேற்கவுள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதி கோவிலில் தரிசனம் செய்தார். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

நாளை (மே 30) ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவின் முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்புவிழாவிற்கு அவர் பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் பதவியேற்பதற்கு முன்னதாக அவர் நேற்று இரவு 7 மணியளவில் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்குசிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அவர் வருவதையொட்டி, வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஜெகன் மோகன் ரெட்டியுடன் சில எம்.பிக்களும் வந்திருந்தனர். நேற்று அங்குள்ள ஹோட்டலில் தங்கிய அவர் இன்று காலை 7 மணிக்கு ஏழுமலையானை தரிசித்தார். 

அவர் ஆந்திராவில் பாத யாத்திரையை தொடங்கும் முன்பாகவும், பாத யாத்திரையை முடித்தவுடனும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close