தொழிற்சாலையில் தீ: ரூ.ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்

  Newstm Desk   | Last Modified : 29 May, 2019 02:26 pm
huge-fire-broke-out-at-andhra-rs-1-crore-valued-coir-damage

ஆந்திராவில், தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான  தென்னை நார்கள் எரிந்து நாசமாயின.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அம்பாஜிபேட்டாவில் உள்ள தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியதால், அங்கிருந்த தென்னை நார்கள் வேகமாக எரிந்தன. 

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும், இந்த விபத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தென்னை  நார்கள் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது. 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close