நாட்டின் மிக இளவயது முதல்வர் இரண்டாவது முறையாக பொறுப்பேற்பு!

  Newstm Desk   | Last Modified : 29 May, 2019 03:56 pm
pema-khandu-sworn-in-as-arunachal-pradesh-cm

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் பெமா கண்டு. அவருக்கு அம்மாநில ஆளுநர் பி.டி.மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக 41 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பெமா கண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து, அருணாச்சல பிரதேச மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக இன்று அவர் பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பி.டி.மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

 கடந்த முறை ஆட்சி செய்தபோதே, பெமா கண்டு மிக இளம் வயது முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போதும் அந்த பெருமை அவரிடமே உள்ளது. பெமா கண்டு வயது 37 என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close