கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து

  Newstm Desk   | Last Modified : 29 May, 2019 03:22 pm
kolkata-fire-breaks-out-at-rifle-range-road-park-circus-12-fire-tenders-present-at-the-spot

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள தனியார் மரக்கிடங்கில், இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் எரிந்து நாசமாயின. 

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின், பார்க் சர்க்கிள் ரோடு அருகே உள்ள தனியார் மரக்கிடங்கில், இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு வைக்கப்பட்டிருந்த பிளைவுட்டுகள் உட்பட, ஏராளமான மரங்கள் எரிந்து நாசமாயின. 

தீயை அணைக்கும் பணியில், 12 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. கடும் போராட்டத்திற்குப் பின், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close