காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி !

  Newstm Desk   | Last Modified : 30 May, 2019 07:29 am
pm-modi-at-atal-memorial-to-pay-homage

இன்று மாலை 7 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி இரண்டாம் முறையாக பிரதமர் பதவி ஏற்க உள்ள நிலையில், டெல்லியில் உள்ள முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவிடத்தில் இன்று காலை 7.00 மணியளவில் பிரதமர் நரோந்திர மோடி, அஞ்சலி செலுத்தினார்.  

மக்களவை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி பிரம்மாண்ட வெற்றியடைந்ததையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி மலர்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக  நரேந்திர மோடி இன்று (30ஆம் தேதி) மாலை 7 மணிக்கு மீண்டும் பதவியேற்கிறார். அவருடன், அவரது அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.  இவ்விழாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் மட்டுமின்றி, நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவிடத்தில் இன்று காலை 7.15 மணியளவில் பிரதமர் நரோந்திர மோடி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமித் ஷா, ரவிசங்கர் பிரசாத், அருண் மெக்வால், பியூஷ் கோயல், ஸ்மிரிதி இரானி மற்றும் அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக மகாத்மா காந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று, வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close